காங். காரிய கமிட்டி நாளை கூடுகிறது

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகின்றது. கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் சூழல் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி, பாஜ தலைமையிலான மத்திய அரசு நெருக்கடியான நேரத்தில் மக்களை காப்பாற்ற தவறிவிட்டது என்றும் நோய் தொற்று தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories:

>