தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு: டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இனிய வாழ்த்துகள். தங்களின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. கொரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன்.ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக மக்களுக்கு நல்லாட்சியை அளிக்க நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): தமிழ்நாட்டின் 12வது முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது  வாழ்த்துகள். விமர்சனம் செய்தல், ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கூறுதல், புதிய திட்டங்களை உருவாக்கி அரசுக்கு அளித்தல் என்று வகுத்துக் கொண்ட இலக்கணங்களுக்கு ஏற்ப பாமக மக்கள் நலன் காக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி (பாமக இளைஞரணி தலைவர்): தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை அவர் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் வழங்கும்.

அனிபா (தமுமுக நிறுவனர்): தமிழக முதல்வராகபதவியேற்று உள்ள    திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தீமைகளை தடுத்து மக்களுக்கு நன்மைகள் செய்திட வாழ்த்துகின்றேன்.

தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்: தமிழக சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Stories:

>