ரெம்டெசிவிர் மருந்து ஏற்றிவந்த விமானம் விபத்து

குவாலியர்: மத்தியப்பிரதேசத்தில் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றி வந்த விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். கொரோனா இரண்டாவது அலையினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் மருந்துகளில் ஒன்றாக ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மத்தியப்பிரதேசத்தில் ரெம்டெசிவிர் பற்றாக்குறை நிலவி வருவதால் மாநில அரசு விமானம் மூலமாக மருந்துகளை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றது. இதுபோன்று டெம்ரெசிவிர் மருந்துகளை ஏற்றிய விமானம் நேற்று இரவு குவாலியரில் உள்ள மகாராஜபுரா விமான நிலையத்திற்கு வந்தது.

விமானம் தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஓடுபாதையில் இறங்கிய  விமானம் விபத்தில் சிக்கியது. இதில் விமானி உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். விமானத்தில் ஏற்றிவரப்பட்ட ரெம்ரெசிவிர் மருந்துகள் சேதமடையாமல் பாதுகாப்பாக இருந்தன. காயமடைந்த விமானிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமானத்தில் இருந்த ரெம்ரெசிவிர் மருந்துகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

Related Stories: