ஊசூர் அருகே சாலையில் விழுந்து கிடந்த மரக்கிளையை அகற்றாததால் வாகன ஓட்டிகள் அவதி

அணைக்கட்டு: அணைக்கட்டு தாலுகா ஊசூரில் இருந்து கந்தனேரி வரை சாலையோரத்தில் இருபுறங்களிலும் உள்ள புளிய மரங்களை சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்றிவிட்டனர். இந்நிலையில் மீதமுள்ள மரங்களில் பல மரங்கள் காய்ந்து பட்டுபோய் விழும் அபாய நிலையில் உள்ளது. இவற்றில் ஊசூரில் இருந்து ரெண்டேரிகோடி செல்லும் சாலையோரத்தில் இருந்த இருந்த புளியமரக்கிளை ஒன்று நேற்று திடீரென முறிந்து விழுந்தது. இதனை நெடுஞ்சாலை  பணியாளர்கள் அகற்றாததால் மரம் சாலையிலேயே நீண்டநேரம் கிடந்தது. இதனால் அவ்வழியாக பைக் மற்றும் வாகனங்களில் சென்றவர்கள் சாலையோரம் இருந்த மண்பாதையில் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

மரக்கிளை முறிந்து விழுந்து பல மணி நேரமாகியும் அதனை அகற்றாததால் அவ்வழியாக சென்றவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். எனவே விபத்து ஏற்படுவதை தடுக்க விழுந்து கிடக்கும் மரக்கிளையை அகற்றவும், மேலும் ஊசூரிலிருந்து அணைக்கட்டு, கந்தனேரி வரை சாலையோரம் காய்ந்த நிலையில் உள்ள புளியமரங்கள் மற்றும் மரக்கிளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: