ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய செல்சியா: பைனலில் மான்செஸ்டருடன் மோதல்

லண்டன்: ஐரோப்பிய சாம்பியன் லீக் அரையிறுதி சுற்றுகளில் ஸ்பெயினின் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்திய இங்கிலாந்தின் ெசல்சீயா  இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கூடவே மே 29ம் தேதி இஸ்தான்புல்லில் நடைபெறும்  இறுதிப்போட்டியில் மான்ெசஸ்டர் சிட்டியை எதிர்கொள்கிறது. ஐரோப்பிய சாம்பியன் லீக் அரையிறுதி போட்டியின் 2வது சுற்று கடைசி ஆட்டம் நேற்று லண்டனில் நடந்தது. அதில் ஒருமுறை சாம்பியன் செல்சீயா(இங்கிலாந்து), 13முறை சாம்பியன் ரியல் மாட்ரிட்(ஸ்பெயின்) அணிகள் மோதின.  

வழக்கம் போல் ரியல் மாட்ரிட் அணிதான் ஆதிக்கம் ெசலுத்தியது. பந்து பெரும்பாலும் மாட்ரிட் வீரர்களிடம்தான் இருந்தது. ஆனால் எதிரணியின் கோல் ஏரியாவை அதிகம் முற்றுகையிட்டது  செல்சீயா வீரர்கள் தான்.

அதனால் ஆட்டத்தின் 28வது நிமிடத்தில்  செல்சீயா வீரர் சில்வெல் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது. அதை சக வீரர்  டிமோ வெர்னர் ஓடிவந்து தலையில் முட்டி அழகாக கோலாக்கினார்.  அதனால் முதல் பாதியில் செல்சீயா  1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.  தொடர்ந்து 2வது பாதியிலும் மாட்ரிட்தான் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் கோல் அடிக்க முடியவில்லை.   டிமோ வெர்னருக்கு பதில்  கிறிஸ்டியன் புலிசிக் களமிறங்கினார். அவர் ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் தட்டி தந்த பந்தை மேசன்  மவுன்ட் கோலாக மாற்றினார். அதனால் செல்சீயா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன் பிறகு 2 அணிகளும் கோல் அடிக்காததால் செல்சீயா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. ஏற்கனேவே இந்த 2 அணிகளுக்கும் இடையில் ஏப்.28ம் தேதி ஸ்பெயினில் நடந்த  அரையிறுதி முதல் சுற்று 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. ஆக, 2 சுற்றுகளின் முடிவில் செல்சீயா 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றதால்  இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

செல்சீயா 3வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ள மான்செஸ்டர் சிட்டி அணியுடன்  செல்சீயா மோத உள்ளது. இந்த 2 அணிகளும் இங்கிலாந்தை சேர்ந்த அணிகளாக  இருந்தாலும் இறுதிப்போட்டி ஏற்கனவே திட்டமிட்டபடி  துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ேம 29ம் தேதி நடைபெறும்.

Related Stories:

>