69% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: இபிஎஸ், ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்து, 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தின் 102வது திருத்தத்தின்படி, மாநில அரசுகள் தங்களுடைய ஆளுமைக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை மட்டுமே மத்திய அரசுக்கு செய்ய முடியும் என்று இப்போது அளிக்கப்படுகின்ற சட்ட விளக்கம் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆன்மாவை சிதைத்துவிடும் என்ற அச்சம் எழுகிறது. தமிழக அரசு உடனடியாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று, 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Related Stories: