சக சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பிய பிறகே நான் விமானத்தில் ஏறுவேன்: மகேந்திரசிங் தோனி

சென்னை: ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சக சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பிய பிறகே நான் விமானத்தில் ஏறுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்பட்டு வந்தது. வீரர்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த 24 நாட்களில் 29 லீக் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி ஐபிஎல் தொடரை பிசிசிஐ நிர்வாகம் ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும் நடப்பு ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சக சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பிய பிறகே நான் விமானத்தில் ஏறுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார். இதனால்தான் தோனி உலகின் மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரராகக் கருதப்படுகிறார். இந்த முறை தன் அணியின் சக வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்கள் பாதுகாப்பாக தங்கள் ஊர் போய் சேர்ந்த பிறகே தான் விமானத்தில் கால்பதிப்பேன் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories:

>