துபாய் விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது

சென்னை: துபாய் விமானத்தில் தங்கம் கடத்திய பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளங்கோவன் பஞ்சநாதன்(46) என்ற பயணியிடம் சந்தேகத்தின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவரது உள்ளாடையில் 578 கிராம் தங்க பேஸ்ட் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ₹28 லட்சம். இதையடுத்து இளங்கோவன் பஞ்சநாதனை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>