முக்கிய செய்தி சென்னை அக்னி நட்சத்திரம்: கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் May 04, 2021 அக்னி ஸ்டார் சென்னை: தமிழகத்தில் இன்று பல இடங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் நீடிக்கும் எனவும் கூறியுள்ளது. வருகிற மே 29-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை மைய அதிகாரி கூறியுள்ளார். தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் உள் மாவட்டங்களில் ஒரு இடங்களிலும் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை இருக்கும் என கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: வனப்பகுதியில் 500 ஏக்கரில் மரங்கள் நாசம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்; டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை.! பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
கொடூரமாக உள்ள வெயிலின் தாக்கம்: தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் விநியோகிக்க உத்தரவு
3ம் கட்ட தேர்தல்களம் பரபரப்பாகிறது மோடி, ராகுல் தீவிர பிரசாரம்: 12 மாநிலங்களின் 94 தொகுதிகளில் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு!
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது
தேர்தலில் பண வினியோக பிரச்னை; போஸ்டர் யுத்தம், ேபாலீசில் எப்ஐஆர் புகார் விஸ்வரூபம்; அண்ணாமலை தலைமையிலான நாளைய பாஜ கூட்டம் திடீர் ரத்து: நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி
கனடாவில் நடந்த போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்
புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ ரூ.38,000 கோடி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதோ ரூ.276 கோடி: தேர்தல் நடக்கும் கர்நாடகத்துக்கு ரூ.3454 கோடி ஒதுக்கீடு; ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என முதல்வர், கட்சி தலைவர்கள் கண்டனம்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்