மேற்குத் தொடர்ச்சியில் தொடர்மழை: கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு

பெரியகுளம்: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழையால், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கிமீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால், இந்த அருவியில் நீர்வரத்து இருக்கும்.

கடந்த 2 நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த  கோடை மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா பரவலை தடுக்க சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்திருந்த நிலையில், அருவியில் நீர்வரத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள குளங்களில் அருவி நீரை விவசாயிகள் பெருக்கி வருகின்றனர். கோடை காலத்தில் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: