காவிரி டெல்டாவை அழிக்கும் 6 நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு உறுதி அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவிரி டெல்டாவை அழிக்கும் 6 நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு உறுதி அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். நிலக்கரி திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதி அளிக்க அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது. புதிய சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களை நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாக சீரழிப்பதற்கு ஆதரவாக இருக்கக் கூடாது.

காவிரி படுகையில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும் காவிரி படுகையை ஒட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலக்கரி சுரங்கத்தை தடுக்காவிட்டால் வளம் மிகுந்த காவிரி படுகை பாலைவனமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார். வேளாண் மண்டலங்களில் எப்படி நிலக்கரி சுரங்கம் அமைக்க முடியும் என அன்புமணி கேள்வி எழுப்பினார். புதிய சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்ற தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேட்டூர் – சேலம் உபரிநீர் திட்டம்: அன்புமணி கோரிக்கை

மேட்டூர் – சேலம் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கலைஞர் முதல்வராக இருந்தபோது மேட்டூர் – சேலம் உபரி நீர் திட்டத்தை அறிவித்தார். வேளாண் நிதிநிலை அறிக்கையில் மேட்டூர் – சேலம் உபரிநீர் திட்டத்தை அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. அவினாசி அத்திக்கடவு திட்டம் போல் மேட்டூர் – சேலம் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலம் உருக்காலையை தனியாருக்கு வழங்கக் கூடாது:

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சேலம் உருக்காலை 500 ஏக்கரில்தான் உள்ளது, பயன்படுத்தாத மீதி 3,500 ஏக்கரை திரும்ப பெற வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும்:

ஆன்லைன் சூதாட்டத்தால் 49 பேர் உயிரிழந்ததற்கு ஆளுநரே காரணம். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் கையெழுத்திட்டு பலரது உயிரை ஆளுநர் காப்பாற்ற வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த தயக்கமும் இல்லாமல் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் கையெழுத்திட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post காவிரி டெல்டாவை அழிக்கும் 6 நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு உறுதி அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: