மக்களே உஷார்!: வெப்பம் உமிழும் கத்திரி வெயில் ஆரம்பம்..அடுத்த 25 நாட்கள் அனல் தெறிக்கும் வெயிலுக்கு வாய்ப்பு..!!

சென்னை: அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கவுள்ள நிலையில், வழக்கத்தை விட இந்த முறை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று தெரிகிறது. ஆண்டுதோறும் தமிழ்மாத கணக்கீட்டின் படி, சித்திரை மாத பிற்பகுதியில் தொடங்கி வைகாசி மாதம் முதல் பாதி வரையில் கத்திரி வெயில் காலமாக கருதப்படுகிறது. அதன்படி இன்று தொடங்கவுள்ள கத்திரி வெயில் அடுத்த 25 நாட்களுக்கு அதாவது மே 29 வரை நீடிக்கிறது. 

தமிழகத்தில் ஏற்கனவே வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இந்த கத்திரி வெயில் காலத்தில் மேலும் வெயிலின் தாக்கமும் வெப்பமும் அதிகரிக்கும். இந்த வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர் வற்றி போகும் என்பதால் நண்பகலில் வெயிலில் சுற்றுவதை குறைத்துக் கொள்வதுடன் உடலில் நீர் சத்தை அதிகரிக்கும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். தமிழ் நாட்டை பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில் தான் கோடைக் காலத்தில் மிக அதிக வெப்பம் உணரப்படுவது வழக்கம். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அவதியில் இருக்கும் மக்கள் தற்போது கத்திரி வெயிலின் வீரியத்தையும் சகித்தாக வேண்டும்.

Related Stories: