உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள லா அசோசியேசன் நிர்வாகிகள் தேர்தல்: தலைவராக பி.செல்வராஜ் வெற்றி

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள லா அசோசியேசன் நிர்வாகிகள் தேர்தலில் வழக்கறிஞர் பி.செல்வராஜ் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். சென்னையின் மிக பழமையான வழக்கறிஞர்கள் சங்கங்களில் ஒன்றாக கருதப்படுவது லா அசோசியேசன். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்த சங்கத்தில் சிறு வழக்குகள் நீதிமன்றங்கள், செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஆஜராகி வரும் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்திற்கான 2023-25ம் ஆண்டுக்கான ேதர்தல் மார்ச் 29ம் தேதி நடந்தது. தேர்தல் அதிகாரியாக சசிகுமார் தலைமையிலான குழு தேர்தலை நடத்தியது. ேதர்தலில் தலைவராக பி.செல்வராஜ், துணை தலைவராக ஏ.கவிமணி, செயலாளராக கே.ஜெயராமன், இணை ெசயலாளராக ஆர்.செல்வம், பொருளாளராக எஸ்.வேல்முருகன், நூலகராக பி.ஜான் போஸ்கோ வெற்றி பெற்றனர்.

செயற்குழு உறுப்பினர்களாக ஏ.கணேசன், டி.பூவண்ணன், கே.விஜயன், ஆர்.பரமசிவம், பி.சிங்காரம், எஸ்.கோபிகாராமன், பி.சுனில், பி.சண்முகசுந்தரம், பி.என்.கமலக்கண்ணன், எஸ்.கோபி, கே.பிரணவகுமார் ஆகிய 11 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் நாளை பொறுப்பேற்க உள்ளனர் என்று சங்க ெசயலாளர் அறிவித்துள்ளார். லா அசோசியேசன் புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள லா அசோசியேசன் நிர்வாகிகள் தேர்தல்: தலைவராக பி.செல்வராஜ் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: