போளூர் நகரில் மக்கள் அவதி சாலையை ஆக்கிரமித்து கொட்டப்படும் கட்டுமான பொருட்கள்-கண்டு கொள்ளாத அதிகாரிகள்

போளூர் : போளூர் நகரில் சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போளூர் நகரில் பெரும்பாலான தெருக்களில் ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 10 தெருக்களில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.

அந்த கட்டுமான பணிக்காக கொண்டு வரப்படும் செங்கல், மணல், எம்சான்ட், ஜல்லிக்கற்கள் போன்ற எல்லா பொருட்களையும் சாலையோரத்திலும், சிலர் சாலை முழுவதையும் ஆக்கிரமித்தும் கொட்டுகின்றனர். சிலர் கான்கிரீட் போடும்போது சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், நேற்று போளூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு எதிரே நடைபெறும் கட்டுமான பணிக்காக சுமார் 20 அடி அகலம் கொண்ட சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் கொட்டி இருந்தனர். இந்த பள்ளிக்கு பக்கத்திலேயே அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு அமைந்துள்ளது. இந்த வழியாகத்தான் போளூர் போலீஸ் ஸ்டேஷன், தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகம் அமைந்துள்ளன. இவ்வழியாகத்தான் எல்லா அதிகாரியும் சென்று வரவேண்டும். ஆனால் கேள்வி கேட்க வேண்டிய அதிகாரிகள் வேறு தெரு வழியாக சுற்றி கொண்டு செல்கின்றனர்.

Related Stories: