இந்தியாவின் கொரோனா மரணங்கள் குறித்து ஐ.நா.கவலை.. உலகிற்கே உதவிய இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என வேண்டுகோள்!!

டெல்லி : இந்தியாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினசரி பாதிப்பு 3 லட்சங்களையும், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.  நாட்டில் கடந்த 18ம் தேதி முதல் நேற்றுடன் முடிந்த கடந்த 10 நாட்களில் மட்டுமே 31 லட்சத்து 8 ஆயிரத்து 698 பேர் தொற்றினால் பாதித்து இருக்கின்றனர். உலகளவில் வேறு எந்த நாட்டிலும் இந்தளவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது கிடையாது. அதேபோல், இதே காலத்தில் 22 ஆயிரத்து 245 பேர் இறந்துள்ளனர். கடந்த 18ம் தேதிக்கு முந்தைய 10 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரம் வரையில் இருந்தது. இது நேற்றைய நிலவரப்படி 100 சதவீதம் அதிகமாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறைவு, ரெம்டெசிவிர், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளும் நிலவி வருகின்றன.இதையடுத்து இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் உதவி செய்து வருகின்றன.

இந்த நிலையில் உலகம் இந்தியாவிற்கு உதவ நேரம் வந்துவிட்டதாக ஐநா சபை 75வது கூட்டத்தொடரின் தலைவர் வோல்கன் போஸ்கிர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நலிவடைந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பல்வேறு உதவிகள் செய்த இந்தியாவின் தற்போதைய சூழல் கண்டு வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உலகம் இந்தியாவுக்கு நிவாரணம் வழங்கி உதவ வேண்டிய நேரம் இது என்றும் தமது எண்ணங்கள் இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் உள்ளதாகவும் வோல்கன் போஸ்கிர் தெரிவித்துள்ளார்.வோல்கன் போஸ்கிரின் ட்விடுக்கு பதிலளித்துள்ள ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராகும் டி.எஸ் திருமூர்த்தி, இத்தகைய காலகட்டத்தில் உங்களின் உணர்வுகளையும் ஒற்றுமை பண்யையும் இந்தியா மிகவும் பாராட்டுகிறது, என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: