இந்தியாவில் உள்ள ஹஜ் கமிட்டி இல்லங்களை தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற முடிவு

டெல்லி: இந்தியாவில் உள்ள ஹஜ் கமிட்டி இல்லங்களை கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2- அலை காரணமாக நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களை உருவாகிவருகிறது. ஆனால் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் அரசுகள் தினறிவருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள ஹஜ் கமிட்டி இல்லங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி முடிவு செய்துள்ளார். இதனால் குஜராத், கர்நாடகம், கேரளம், டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், மராட்டியம், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, ராஜஸ்தான், பீகார், திரிபுரா, ஜார்கண்ட்  ஆகிய மாநிலங்களில் உள்ள ஹஜ் இல்லங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: