நெமிலி அடுத்த சயனபுரத்தில் ஆபத்தான மின்கம்பம் மாற்றம்-பொதுமக்கள் மகிழ்ச்சி

நெமிலி : நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் தினகரன் செய்தி எதிரொலியால் மாற்றப்பட்டது.நெமிலி அடுத்த சயனபுரம் கிராமம் பஜனை கோயில் தெருவில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்றில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, எலும்புக்கூடாக மாறி முறிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் அவ்வழியாக செல்வார்கள் எப்போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ என அச்சத்துடனே இருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி தினகரன் நாளிதழில் மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தி படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் அகற்றிவிட்டு புதிய மின்கம்பதை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: