17 நாட்களாக நடந்த தொடர் சோதனையில் கொரோனா விதிகளை மறந்த 5.83 லட்சம் பேர் மீது வழக்கு: போலீசார் நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 17 நாட்களில் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணியாமல் சுற்றிவந்ததாக 5.83 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு ெசய்து அபராதமாக போலீசார் ₹11.64 கோடி வசூலித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது தமிழகம் காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 8ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை முகக்கவசம் அணியாமல் சுற்றியதாக 5லட்சத்து 83 ஆயிரத்து 199 பேர் மீது வழக்கு பதிவு செய்து 11 கோடியை 66 லட்சத்து 39 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர். அதேபோல், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் சுற்றியதாக 17,670 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக ₹88 லட்சத்து 35 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: