இலங்கையில் பரவும் புதிய கொரோனா

கொழும்பு: இலங்கையில் புதுவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தொற்றுநோய் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இலங்கையில் உள்ள ஜெயவர்தனபுரா பல்கலைக் கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறை தலைவரான நீலிகா மலாவிஜ் கூறுகையில், ‘‘இலங்கையில் புதுவகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பரவியிருக்கும் கொரோனாவைவிட, புதிய வைரஸ் வேகமாக தொற்றும் தன்மை கொண்டது. ஒருவரின் தும்மலி,் இருந்து வெளியேறும் இந்த வைரஸ், ஒரு மணி நேரம் வரையிலும் காற்றில் வீரியத்துடன் இருக்கும். அப்போது காற்றின் மூலமாகவே மற்றவர்களை தாக்கும்,’’ என்றார்.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிறைய இளைஞர்கள் புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கக் கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், இலங்கையில் அடுத்த 2 வாரங்களில் 3ம் அலை உருவாகலாம் என்றும் சுகாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த புதிய வைரஸ் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருவதாக நிபணர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: