அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு: ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் பொது செயலாளராக சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை அதிமுகவினர் தேர்வு செய்தனர். ஆனால், 2017ம் ஆண்டு பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா, தினகரன் தேர்ந்தெடுத்தக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ஜூன் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அச்சமயம் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா, சிறை செல்ல நேர்ந்தது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கட்சியின் முழு பலத்தையும் கையிலெடுத்த ஈபிஎஸ்- ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்த முடிவு செல்லாது என தீர்மானம் நிறைவேற்றினர். இதனிடையில், டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேறிவிட்டார். அதிமுகவின் இந்த நகர்வு சசிகலாவின் தலையில் பேரிடியாக விழுந்த நிலையில், அவர் நீதிமன்றத்தை நாடினார்.

அதிமுக பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலாவும் டிடிவி தினகரனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதிமுகவில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கியதால் இந்த வழக்கில் இருந்து விலகிவிட்டார். சசிகலா மட்டும், தனது பொதுச் செயலாளர் பதவியை மீட்டெடுக்க சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார். அரசியலில் இருந்து தன்னை விலக்கிக் கொண்ட பிறகும், இந்த வழக்கில் பின்வாங்க அவர் விரும்பவில்லை. இந்த நிலையில் சசிகலாவின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி விடுப்பில் இருந்த காரணத்தால் வழக்கு விசாரணையை ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: