தடுப்பூசி விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம்: கமல் குற்றச்சாட்டு

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நிலையில், தடுப்பூசியின் விலை உயர்வு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அலட்சிய கிருமி தாக்குதலாலும்  இந்தியா அல்லாடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால்,  தடுப்பூசிகளின் விலை திடீரென்று உயர்ந்திருக்கிறது. மக்களை காப்பது அரசின் பொறுப்பு என்று நீதிமன்றம் இடித்துச் சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இன்னொரு பதிவில், ‘பூமியை மீட்போம் என்கிற கோஷத்தோடு உலக பூமி நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இயற்கையை சிதைத்தால் விளைவு என்னவாக இருக்கும் என்பதை இக்காலம் ‘மாதிரி’ காட்டிக் கொண்டிருக்கிறது. தாங்க மாட்டீர்கள் ஜகத்தீரே. இயற்கையை பேணி, அதன் கொடையால் நாமும் வாழ்வோம்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: