காரில் எடுத்து சென்ற ரூ7.60 லட்சம் பறிமுதல்

சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு நேர ஊரடங்கில் ஈடுபட்டனர். இதனால் மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி 200 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி அருகே அண்ணாசதுக்கம் போலீசார் சாலையின் இடையே தடுப்புகள் அனைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மின்னல் வேகத்தில் வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். காரில் ரூ7.60 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. பணம் குறித்து காரில் வந்த கடலூரை சேர்ந்த பில்லு என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரூ7.60 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து பில்லுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>