இதுவே எனது கடைசி காலை வணக்கம் பேஸ்புக்கில் குட்பை சொல்லிவிட்டு கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்

மும்பை செவ்ரி டிபி மருத்துவமனையில் பணி புரிந்தவர், மணிஷா ஜாதவ். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், தொற்று தீவிரம் ஆனதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர் என்ற முறையில், தனது உடல் நிலையை நன்கு உணர்ந்திருந்த அவர், தான் வாழ்வின் இறுதிக் கட்டத்தை நெருங்கியதாகவே கருதினார். இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ‘‘இதுவே எனது கடைசி காலை வணக்கமாக இருக்கும் என கருதுகிறேன். இனி இந்த வலைதளத்தில் உங்களை சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்காது. அனைவரும் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உடல் வேண்டுமானால் இறந்து போகலாம்.... ஆனால், ஆன்மா ஒரு போதும் இறப்பதில்லை. அது அழிவில்லாதது’’ என குறிப்பிட்டிருந்தார். இது மருத்துவமனை ஊழியர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>