தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு; வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.11,000 உயர்வு

 

சென்னை: வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.11,000 உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்வு போக்கில் உள்ள நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு, ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.11,000 உயர்ந்து ரூ.2,22,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.222க்கு விற்கப்படுகிறது.இதேபோல், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் (8 கிராம்) ரூ.400 உயர்ந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை சுமார் ரூ.12,350 அளவில் உள்ளது. சவரன் விலை ரூ.ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன.

சர்வதேச சந்தையில் தங்கம் பாதுகாப்பு முதலீடாகவும், வெள்ளியின் தொழிற்துறை தேவை (சோலார் பேனல், எலக்ட்ரானிக்ஸ், மின்சார வாகனங்கள் போன்றவை) அதிகரித்ததாலும் விலைகள் உயர்ந்துள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக சரிவு, பண்டிகை மற்றும் திருமண சீசன் தேவை, பணவீக்கத்திற்கு எதிரான முதலீடு போன்றவையும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன.பொங்கல், திருமணங்கள் நெருங்கிவிட்ட நிலையில், தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்கும் திட்டங்களை பலர் கொண்டுள்ளனர். ஆனால் இந்த விலை உயர்வால் பட்ஜெட் பாதிக்கப்பட்டு, பல இல்லத்தரசிகளும் முதலீட்டாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

நகைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களில் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.2,11,000 அளவில் இருந்து இன்று ரூ.2,22,000 ஆக உயர்ந்துள்ளது. தங்கமும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு தங்கம்-வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கத்துடன் உயர்வு போக்கிலேயே இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Related Stories: