பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்!: சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. டிஜிபி அந்தஸ்திலான அதிகாரி மீதான பாலியல் தொல்லை புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண் எஸ்.பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முறையாக இருக்காது என்பதால் வழக்கை சி.பி.ஐ. க்கு மாற்றக்கோரி ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி. கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரணையை கண்காணித்து வருவதாகவும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் எஸ்.பி. அளித்த புகாரில் உட்புகார் விசாரணை குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. உட்புகார் விசாரணை குழு மற்றும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைகளுக்கு நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சிறப்பு டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, டிஜிபி அந்தஸ்திலான அதிகாரி மீதான பாலியல் தொல்லை புகாரை தனி நீதிபதி கண்காணித்து வருவதால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என கூறி ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

Related Stories:

>