ஆபாச வீடியோவை வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: முன்னாள் காதலன் கைது

தாம்பரம்: தாம்பரம் பகுதியை சேர்ந்த 29 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் திருமணமாகி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அவருடன் வேலை செய்த  சந்தியராஜ் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்தபோது, சந்தியராஜ் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே, இளம்பெண்ணை தொடர்புகொண்ட சந்தியராஜ், எனக்கு செலவுக்கு பணம் வேண்டும், என கூறியுள்ளார். மேலும், தர மறுத்தால் நாம் இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன், என மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுபற்றி தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பல்லாவரம் ராஜாஜி நகரை சேர்ந்த சந்தியராஜை (31) கைது செய்தனர்.

Related Stories:

>