டெல்லி: வந்தே பாரத் ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை என ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் அதிவேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம் பயணிகளுக்கு பயணத்தை எளிதாக்குகிறது. ஒன்றிய அரசு பல இடங்களில் இந்த வந்தே பாரத் இயக்கத்தை தொடங்கியுள்ளது. சமீப காலமாக வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், வந்தே பாரத் ரயில்கள் மீது கல்லெறிந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் தெலுங்கானாவில் பல்வேறு இடங்களில் இருந்து வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்கள் மீது கல் வீசினால் இந்திய ரயில்வே சட்டம் 153 பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்தாண்டில் மட்டும் இதுவரை 9 சம்பவங்கள் பதிவு ஆகியுள்ளது, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.
