ஏரல் தாமிரபரணி ஆறு புதிய பாலத்தில் மீண்டும் உடைப்பு: சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஏரல்: ஏரல் தாமிரபரணி ஆறு புதிய மேல்மட்ட பாலத்தில் தரைத்தளம் உடைந்து ஓட்டை விழுந்துள்ளது. அப்பகுதியில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகாமல் இருக்க பேரிகார்டு வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணி ஆற்றில் உள்ள தாம்போதி பாலம், மழை காலத்தில் தண்ணீர் பெருக்கெடுக்கும் போது நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ஏரல் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புதிய மேல்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ரூ.17 கோடி மதிப்பீட்டில் புதிய மேல்மட்ட பாலம் கட்டப்பட்டு 2016ல் திறக்கப்பட்டது. ஆனால் பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய ஓராண்டிலேயே கான்கிரீட் தரைத்தளம் இணைப்பு பகுதியில் பல இடங்களில் உடைந்தது. இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானதை தொடர்ந்து தரைத்தளம் சரி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பாலத்தின் இணைப்பு பகுதியில் தரைத்தளம் உடைந்தது.

இதை உடனடியாக அதிகாரிகள் சீரமைக்காததால் வாகனம் செல்ல, செல்ல அந்த இடத்தில் ஏற்பட்ட உடைப்பு அதிகமாகி கொண்டே போனது. நேற்று, உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இரும்பு பட்டை பெயர்ந்து ஓட்டை விழுந்தது. இதனால் அவ்வழியாக வந்த ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், விபத்து ஏதும் அந்த இடத்தில் ஏற்படாமல் இருப்பதற்காக பெயர்ந்து நின்ற கம்பியை எடுத்து பாலத்தின் ஓரத்தில் போட்டார். மேலும் அந்த இடத்தில் வாகனம் செல்ல, செல்ல மேலும் தரைத்தளம் உடைந்து விடாமல் இருப்பதற்காகவும், விபத்தை தவிர்க்கும் வகையிலும் பாலம் உடை ந்த இடத்தில் பேரிகார்டு கொண்டு தடுப்பு ஏற்படுத்தி ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது; ஏரல் புதிய மேல்மட்ட பாலத்தில் ஒவ்வொரு தூண்களுக்கும் மேலே கான்கீரிட் தரைத்தளம் போடும் போது இரும்பு பட்டை வைத்து கான்கீரிட் போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அவ்வப்போது கம்பிகள் பெயர்ந்தும், தரைத்தளம் பகுதி உடைந்தும் வருகிறது. இப்பகுதியில் தரைத்தளத்தில் சிறிய உடைப்பு ஏற்பட்ட போதே சீரமைக்காமல் விட்டதால் உடைப்பு பெரிதாகியுள்ளது. தற்போது அந்த இடத்தில் பாதுகாப்பு கருதி பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாக பாலத்தின் மேல் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ள தரைத்தளத்தை சீரமைத்திட வேண்டும்’ என்றார். தினகரனில் செய்தி வெளியானதை தொடர்ந்து தரைத்தளம் சரி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பாலத்தின் இணைப்பு பகுதியில் தரைத்தளம் உடைந்தது.

Related Stories: