திருநங்கையர் நாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆண்-பெண் இரு பாலினத்தவர் போலவே திருநங்கையரும் அனைத்து நிலைகளிலும் சம உரிமை பெற்று வாழ்ந்திட வேண்டும் என்பதை நம் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் ஏப்ரல் 15(நேற்று) திருநங்கையர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. திருநங்கை எனும் சொல்லுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்தை அளித்து அவர்களின் நலன் காக்கத் தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர். அவர் வழியில் திமுக என்றும் திருநங்கையர்/திருநம்பியர் உரிமைகளைக் காத்து நிற்கும் என்ற உறுதியினை வழங்கி, திருநங்கையர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது. திருநங்கை எனும் சொல்லுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்தை அளித்து அவர்களின் நலன் காக்கத் தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர்.

Related Stories:

>