ஐபிஎல் 2021 டி20: கொல்கத்தா அணி க்கு எதிரான போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: ஐபிஎல் 2021 டி20 தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஈயன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்களை கொல்கத்தா அணிக்கு  வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ்  56 ரன்களும், ரோஹித் சர்மா 43 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Related Stories:

>