கொடைக்கானலில் பிளாஸ்டிக்கை தின்று பலியாகும் காட்டு மாடுகள்-தடுக்க கோரிக்கை

கொடைக்கானல் : கொடைக்கானலில் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று காட்டு மாடுகள் பலியாகின்றன. இதனை தடுக்க வேண்டும் என கோரிக்கை விழுந்துள்ளது.கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றன.குறிப்பாக காட்டு மாடுகள் முக்கிய வீதிகள், சுற்றுலா தலங்களில் அதிகளவில் உலா வருகின்றன. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அச்சமடைந்து வருகின்றனர். காட்டு மாடுகள் தாக்குதலில் பலர் காயமடைந்ததுடன், சில உயிரிழப்புகளும் நடந்துள்ளன. எனினும் வனத்துறையினர் காட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் விரட்ட இதுவரை ஒரு முழுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை.

இந்நிலையில் நகர் பகுதியில் திரியும் காட்டு மாடுகள் குப்பை தொட்டிகளில் கழிவுகளை குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை தின்று வருகின்றன. இதனால் காட்டு மாடுகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பலியாகி வருகின்றன. எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை நகர் பகுதிக்குள் வருவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: