கொரோனா பாதிப்புக்கு இடையே திருச்சூர் பூரம் விழா கண்டிப்பாக நடக்கும்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இம்மாத இறுதியில் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக பூரம் திருவிழாவுக்கு வெளிநாடுகள் உட்பட பல இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் திரள்வது வழக்கம். ஆனால் ெசன்ற ஆண்டு கொரோனா காரணமாக திருச்சூர் பூரம் திருவிழா நடத்தப்பட வில்லை. இந்த நிலையில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து கட்டுப்பாடுகளுடன் இந்த ஆண்டு திருச்சூர் பூரம் விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டது.தற்போது கொரோனா அதிகரித்துள்ள நிலையில், பூரம் திருவிழாவை நடத்தினால் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என்று திருச்சூர் மாவட்ட மருத்துவ அதிகாரி ரீனா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘பூரம் திருவிழாவை நடத்தினால் குறைந்தது 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவும். அதுபோல இறப்பு சதவீதம் அதிகரிக்கும்’’ என்றார். ஆனால் இதற்கு பூரம் திருவிழா நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கண்டிப்பாக பூரம் விழா நடத்துவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பூரம் திருவிழாவில் கொரோனா நிபந்தனைகள் முறையாக கடைபிடிக்கப்படும் என அமைச்சர் சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: