கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி தமிழக அதிகாரிகள் ஆந்திரா பயணம்: 4 டிஎம்சி நீரை விடுவிக்க வலியுறுத்த திட்டம்

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா செல்கின்றனர். அப்போது, 4 டிஎம்சி நீரை விடுவிக்குமாறு வலியுறுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதிதண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக 3231 மில்லியன் கன அடி கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்ததால் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை ஒரளவு பூர்த்தி செய்ய முடிந்தது. இந்த நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெண்த வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக பதிவான நிலையில், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.

இதனால், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீரை முழுவதுமாக ெபாதுப்பணித்துறையால் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது. அதில், கண்டலேறு அணையில் இருந்து பிப்ரவரி 28ம் தேதிக்கு பிறகு தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும். ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் போதும். அப்போதும் மீதம் தர வேண்டிய 4 டிஎம்சி நீரை தர வேண்டும் என்று அதில் கூறியுள்ளது. இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை ஆந்திர அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதிக்கு பிறகு படிப்படியாக குறைத்தனர்.

இந்த நிலையில் 3231 மில்லியன் கன அடி கொண்ட பூண்டி ஏரியில் 1838 மில்லியன் கன அடியாக குறைந்தது. எனவே, மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் ஆந்திரா செல்கின்றனர். அப்போது, அவர்கள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீர் தருமாறு வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.8 டிஎம்சி நீர் இருப்பு : 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1838 மில்லியன் கன அடியாகவும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 757 மில்லியன் கன அடியாகவும், 3300 மில்லியன் கன அடி ெகாள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3020 மில்லியன் கன அடியாகவும், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3012 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு ெகாண்ட தேர்வாய் கண்டிகை ஏரியில் 481 மில்லியன் கனஅடியாகவும் நீர் இருப்பு உள்ளது.

7.61 டிஎம்சி நீர் திறப்பு: தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தபடி கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு ஆந்திர அரசு தர வேண்டும். குறிப்பாக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி நீர் தர வேண்டும். ஆனால், தற்போது வரை 7.614 டிஎம்சி வரை தமிழகத்துக்கு தண்ணீர் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: