ரம்ஜான் நோன்பு கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க வேண்டும்: கே.எம்.காதர் மொகிதீன் கோரிக்கை

சென்னை: ரம்ஜான் நோன்பு கஞ்சிக்காக வழக்கம் போல் பள்ளிவாசல்களுக்கு இலவச பச்சரிசி வழங்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் இஸ்மாயில்தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதம்:கொரோனா இரண்டாவது அலை பரவுவதால் வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாடு செய்ய அனுமதி என்று அறிவித்துள்ளீர்கள். முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் நோன்பு ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி ஒரு மாதம் கடைபிடிக்கிறோம். அந்த நேரத்தில் இரவில் பள்ளிவாசலில் தொழுகை நடத்தி புனித கடமையாற்றுவோம். எனவே இரவு 8 மணி என்பதை 10 மணி வரை பள்ளிவாசல்கள் திறக்க அனுமதிக்க வேண்டும்.

மேலும் பல வருடங்களாக தமிழக அரசு ரமலான் காலத்தில் நோன்பு கஞ்சிக்காகபள்ளிவாசல்களுக்கு இலவச பச்சரிசி வழங்கி வருகிறது. இதுவரை அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. உடனடியாக அரசாணை வெளியிட்டு இலவச பச்சரிசியை பள்ளிவாசல்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>