லட்சத்தீவில் அனுமதியின்றி போர்க்கப்பல் அமெரிக்கா செயலுக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: லட்சத்தீவுகள் கடல் பகுதியில் முன் அனுமதியின்றி நீர்வழித்தடத்தை அமெரிக்கா தனது போர் கப்பல்கள் பயன்படுத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க கப்பற்படையின் 7வது பிரிவு  கமாண்டர் வெளியிட்ட அறிக்கையில், `ஏவுகணை போர் கப்பலான யுஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் (டிடிஜி 53), கடந்த 7ம் தேதி, லட்சத் தீவுகளின் மேற்கில் 130 கடல்மைல் தொலைவில், இந்தியாவின் பொருளாதார எல்லைக்குள், சர்வதேச நீர்  வழித்தட விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக சென்று வந்தது. இது இந்தியாவின் கடல்சார் உரிமைகளுக்கு சவால் விடுக்கும் வகையில், அரசின் அனுமதியின்றி சுதந்திரமாக சென்று வந்தது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்க போர் கப்பல்கள் சுதந்திரமாக சென்று வருவது வழக்கமானது. கடந்த காலத்திலும் கப்பல்கள் சென்று வந்தன. இனிமேலும், சுதந்திரமாக சென்று வரும்,’ என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த  நடவடிக்கைக்கு இந்திய அரசு தரப்பில் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: