தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறை செயலாளர் பிரபாகர் டெல்லி பயணம்: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்

டெல்லி: சட்டமன்ற தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர், காவல்துறை டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தனர். குறிப்பாக இன்று காலை 11 மணி அளவில் மத்திய பணிவாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர்கள் டெல்லி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக பதவி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக கடந்த ஆண்டு யுபிஎஸ்சி நடத்த வேண்டிய கூட்டம் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது.

இதனால் இந்த ஆண்டுக்கான கூட்டம் இன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகியோரின் பதவி உயர்வு தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. குறிப்பாக பதவி உயர்வு தொடர்பாக மத்திய பணிவாளர் தேர்வாணையத்தின் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாநிலம் சார்பில் கலந்துகொள்ளக்கூடிய அதிகாரிகளுடன் பணிவாளர் தேர்வாணையம் இன்று நடைபெறக்கூடிய ஆலோசனை கூட்டத்தில் முழுமையாக ஆலோசிக்கும்.

யாருக்கெல்லாம் பதவி உயர்வு வழங்க வேண்டும், என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு இந்த கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் தொடர்பாக இன்னும் ஒருசில நாட்களில் முழுமையான அறிவிப்புகள் யுபிஎஸ்சி சார்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: