அனைவரும் கைகோர்த்து கொரோனா வைரஸ்சை அடியோடு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகளைக் கூட கடைபிடிக்காதது தான் இந்த அளவுக்கு நிலைமை மோசமானதற்கு காரணம் ஆகும். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைகளும் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்ததை எவராலும் மறுக்க முடியாது.  தமிழ்நாட்டில் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு கூறி விட்டது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடமாடுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகபட்சமாக 5,000 வரை அபராதம் விதிப்பது, சிறை தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு, மக்கள் என அனைவரும் கைகோர்த்து கொரோனா என்ற பெருந்தீமையை அடியோடு ஒழிக்க பாடுபட வேண்டும்.

Related Stories: