கட்டுப்பாடுகளை கடைபிடித்து கொரோனா 2வதுஅலையை தடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக கொரோனா தொற்று படிப்படியாக, மாவட்ட ரீதியாக பரவ தொடங்கி உள்ளது. இறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அதுவும் தவிர்க்கப்பட வேண்டும். தமிழக அரசு மீண்டும் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை அனைத்து தரப்பு வசதிகளையும் செய்ய தொடங்கி இருக்கிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் கோட்பாடுகளை கவனமாகவும், கண்டிப்பாகவும் கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதான் 2வது அலையின் தொடக்கத்தை படிப்படியாக அனைவரும் இணைந்து முறியடிக்க முடியும். அரசின் செயல்பாடுகள் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியாது. தனிமனிதர்களும் முறையாக கோட்பாடுகளை கடைப்பிடித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நம்முடைய உயிர்களை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உண்மை நிலையை புரிந்து செயல்பட வேண்டும்.

Related Stories: