889 பேருக்கு பயிற்சி அளித்ததில் 84 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று ஓட்டு போட்டனர்: கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டீன் தகவல்

சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 889 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், 84 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று நேற்று ஓட்டுப் போட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவோரில் 84 பேர் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். மற்றவர்களை போல், ஓட்டுளிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு காப்பக வளாகத்தில் பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எந்ெதந்த கட்சியை சார்ந்தவர்கள் என்பது போன்றவை குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். அதன் அடிப்படையில், அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ணா சந்திரிகா கூறுகையில், ‘மனநல காப்பகத்தில் 889 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் புரிந்துகொள்ளும் தன்மையில் உள்ள 88 பேரை தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் 84 பேர் தகுதி பெற்றனர். அவர்கள் அனைவரும், வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல் காப்பகத்தில் பணியில் உள்ள 10 பணியாளர்களும் வாக்குகளை பதிவு செய்தனர்’ என்றார்.

Related Stories: