தேர்தல் விதிகளை மீறி: வாக்குச்சாவடிக்கு பாஜ கொடி கட்டிய காரில் ஓட்டுபோட வந்த நடிகை குஷ்பு: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

சென்னை: தேர்தல்  விதிகளை மீறி வாக்குச்சாவடி மையத்திற்கு பாஜ கொடி கட்டிய காரில் வந்த நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் மயிலாப்பூர் கிழக்கு பகுதி 126வது திமுக வட்ட செயலாளர் கண்ணன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மந்தைவெளி பகுதியில் உள்ள சயித்தன்யா பள்ளியில் வாக்கு பதிவு நடந்தது. காலை 10.47 மணிக்கு TN 06 W 6558 பதிவு எண் கொண்ட காரில் ஆயிரம்விளக்கு தொகுதியின் பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் அவரது கூட்டணி கட்சியின் ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிராக அவரது காரில் பாஜ கொடியை பறக்க விட்டு அத்துமீறி வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்துள்ளார். அதனை அங்கு பணியில் இருக்கும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அலுவலர்கள் அனைவரும் எந்ததொரு ஆட்சேபனையும் செய்யாமல் அனுமதித்துள்ளனர்.

இந்த தகவல் கிடைத்து நான் நேரில் சென்ற போது, என்னையும், எனது கட்சி வேட்பாளரின் பூத் முகவரும் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கண்டு கொள்ளவில்ைல. எனவே தேர்தல் விதிகளை மீறி வாக்குச்சாவடி மைய வளாகத்திற்குள் பாஜ கொடியுடன் வந்த ஆயிரம்விளக்கு பாஜ வேட்பாளர் குஷ்பு சுந்தர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: