லால்பாக் எக்ஸ்பிரஸ் டி.9 கோச் ரயிலில் மின்விசிறி இயங்காததால் புழுக்கத்தில் பயணிகள் அவதி-கண்டுகொள்ளாத ரயில்வே நிர்வாகம்

பாணாவரம் :  லால்பாக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் D-9 கோச்சில் மின்விசிறி இயங்காததால் புழுக்கத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் லால்பாக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்று பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் பங்காருபேட்டை,  குப்பம் ஆகிய ரயில் நிலையங்களை கடந்து ஜோலார்பேட்டைக்கு வந்து நின்றது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருப்பதால்  ரயிலில் பயணித்த பயணிகளுக்கு புழுக்கம் தெரியவில்லை.

வேலூர் மாவட்டத்தில், அதிக வெயில் தாக்கத்தால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு  வண்டி வந்து நின்றவுடன் கடுமையான புழுக்கத்தில் பயணிகள் தவித்தனர். முன்பதிவு செய்யப்பட்ட டி-9 கோச்சில் மட்டும் மின்விசிறி ஸ்விச்சை பயணிகள் போட்டபோது  மின்விசிறி இயங்கவில்லை.

இதனால் பெண்கள், குழந்தைகள்,  முதியவர்கள் உள்ளிட்டோர் புழுக்கத்தால் கடுமையான அவதிக்குள்ளாகினர். டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தும் உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கூட  மின்விசிறி பழுது சரி செய்யப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ரயில்வே  நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலை எண்ணி, புழுக்கத்தில் பயணிகள் வேதனையுடன் பயணம் செய்தனர்.

Related Stories: