அரியலூர்: அரியலூர் அண்ணாசிலை அருகே திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து வி.சி.கட்சி தலைவர் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:பாஜக மற்றும் பாமகவுடன் இணைந்து சந்தர்ப்பவாத கூட்டணியை அதிமுக அமைத்திருக்கிறது. அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். பாஜகவினர் போட்டியிடும் 20 தொகுதிகளில் மட்டுமல்ல, அதிமுக, பாமக கூட்டணி உட்பட, அந்த கட்சிகள் போட்டியிடும் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. வெற்றி பெறும் உறுப்பினர் அதிமுக உறுப்பினராக இருக்க முடியாது.