ராதாநகர் சுரங்கப்பாதை விரைவில் திறக்கப்படும்: இ.கருணாநிதி உறுதி

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று குரோம்பேட்டை ராதா நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுட்டார். அப்போது மக்களிடயே அவர் பேசுகையில், ‘குரோம்பேட்டை மற்றும் ராதா நகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைகள் ஏற்பட்டபோது, உடனடியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து தந்தேன். அதேபோல, எனது சொந்த செலவில் லாரிகள் மூலம் ஒவ்வொரு தெருவாக குடிநீர் விநியோகம் செய்தேன். திமுக ஆட்சியில் நான் பல்லாவரம் நகர மன்ற தலைவராக இருந்தபோது, ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தேன்.

ஆனால், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், இதை அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக முடக்கியது. இதற்காக, சட்டப்பேரவை மற்றும் எனது சொந்த செலவில் நீதிமன்றத்தை நாடி தற்போது அந்த பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் அது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். எனவே, மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீனதயாளன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராம் உட்பட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: