சட்டப்பேரவை தேர்தல்: நேற்று ஒரே நாளில் 3,065 பேருந்துகளில் 1,22,600 பயணிகள் பயணம்..! 30,237 பேர் முன்பதிவு: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர விழிப்புணர்வு செய்து வருகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வருகிற 4, 5-ந் தேதி ஆகிய 2 நாட்களும் பொதுமக்கள் வசதிக்காக பண்டிகைகாலம் போல் கோயம்பேடு, மாதவரம் பஸ் நிலையம், கே.கே நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் , தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய 6இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; போக்குவரத்து துறையின் சார்பில்,  2021- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று இரவு 24.00 மணி நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் என 2,535 பேருந்துகளும், இன்று காலை 09.00 மணி  நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,225 பேருந்துகளில் 510 பேருந்துகளும் 20 சிறப்புப் பேருந்துகள் என ஆக கடந்த 01/04/2021 முதல் 02/04/2021 இன்று காலை 09.00 மணி வரையில் 3,065 பேருந்துகளில் 1,22,600 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரையில் 30,237 பயணிகள் முன்பதிவும் செய்துள்ளனர்.

Related Stories: