மதுராந்தகம் ஏரியில் படகு குழாம்: அதிமுக வேட்பாளர் உறுதி

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் படகு குழாம் ஏற்படுத்தப்படும் என அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் உறுதியளித்தார். மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் நேற்று அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கூடலூர், ஒரத்தூர், கீழாமூர், பாதிரி, ராமாபுரம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். அவருடன் மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் விவேகானந்தன், பாமக மாநில துணை பொது செயலாளர் பொன்.கங்காதரன், மாவட்ட செயலாளர் ஆத்தூர் வ.கோபாலகண்ணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர் ஆதிகேசவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

தொடர்ந்து, மதுராந்தகம் ஒன்றியத்தில் சிலாவட்டம், சிறுகளத்தூர்,  பாக்கம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது,  ஒன்றிய செயலாளர் முதுகரை கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்   பாக்கம் மாசி, தேவராஜ் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர். அப்போது, வேட்பாளர் மரகதம் குமரவேல் பேசியதாவது. தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை நோக்கி வருபவர்களின் நுழைவாயிலாக மதுராந்தகம் தொகுதி அமைந்துள்ளது. இங்குதான் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியும் உள்ளது. வருடத்தின் பெரும்பாலான நாட்களில் நீர் நிறைந்து காணப்படும். இந்த ஏரியில் படகு குழாம் அமைத்தால் ஏரிக்கரையை ஒட்டி அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு மிகுந்த பொழுதுபோக்காக அமையும் என்ற கருத்து இப்பகுதி மக்களிடையே நீண்ட நாட்களாக உள்ளது.

அதுபோல், சுற்றுலா மையத்தை ஏற்படுத்த, இந்த மதுராந்தகம் ஏரி ஏற்றதாகவே இருக்கிறது. மேலும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்பவர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்வோர் மட்டுமின்றி மாமல்லபுரம், வேடந்தாங்கல், வண்டலூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் உற்சாகம் தரும். எனவே, நான் வெற்றி பெற்றால் மதுராந்தகம் ஏரியில் படகு குழாம் ஏற்படுத்துவேன் என்றார்.

Related Stories: