2 ஆண்டுகளுக்கு பின் தடை நீக்கம்; இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பருத்தி, சர்க்கரை இறக்குமதி

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதால் எரிச்சல் அடைந்த பாகிஸ்தான், இந்தியா உடனான தூதரக உறவை முறித்து கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் வர்த்தகம், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானின் பொருளாதார ஒத்துழைப்பு குழு கூட்டம் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்தது. இது குறித்து நிதி அமைச்சர் ஹமாத் அசார் கூறுகையில், ``இந்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான 2 ஆண்டு கால தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்தியாவில் இருந்து 5 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் மீண்டும் தொடர உள்ளது. பாகிஸ்தானின் சிறுகுறு, நடுத்தர தொழில்துறையினர் பாதிக்கப்பட்டதால், பருத்தி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, நடப்பாண்டு ஜூன் மாதம் முதல் இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: