பிரசாரத்தில் ஊழியரை டார்ச் லைட்டால் தாக்கிய கமல்: வைரலாகும் வீடியோ

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன்  பிரசாரம் செய்தார். புதுச்சேரி செஞ்சி சாலை சந்திப்பில் பிரசாரத்தை துவங்கும்போது அவரது மைக் வேலை செய்யவில்லை. 15 நிமிடங்கள் முயற்சித்தும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த கமல், டார்ச் லைட்டை காண்பித்து பிரசாரம் செய்துவிட்டு, வேனில் கீழே உட்கார்ந்து இருந்த ஊழியரிடம் பிரசாரம் செல்வதற்கு முன்பு மைக்கை சரிபார்க்க வேண்டாமா? நீங்கள் என்ன தான் வேலை பார்க்கிறீர்கள் எனக்கூறி அவர் மீது டார்ச் லைட்டை வீசினார். உடனே வாக்கு சேகரிப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து, மைக் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சரி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சில பகுதிகளிலும் பிரசாரம் செய்தார். மேலும் பிரசாரம் செய்யும் இடங்களை குறைத்து விட்டு, விமான நிலையத்துக்கு அவசர அவசரமாக சென்று அங்கிருந்த ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்றார். பல இடங்களில் அவர் பிரசாரம் செய்யாததால் மநீம தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஊழியரை கமல் டார்ச் லைட்டால் தாக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: