Mr. வாக்காளர்: விவசாயம் நடக்காத தொகுதி; நைனார் குப்பம் (செய்யூர் தொகுதி) விஜி என்கிற லட்சுமணன்

கிராமங்கள் நிறைந்த செய்யூர் தொகுதியில் விவசாயம் தான் பிரதான தொழில். இந்த தொகுதியில் வேளாண்மை பெருக்கவும், விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக 24 கிராமங்களை உள்ளடக்கிய இடைகழிநாடு பேரூராட்சியில் மா, பலா, முந்திரி, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடக்கிறது. தென்னை மரங்கள், முந்திரி மரங்களில் கால நிலைக்கேற்ப பூச்சி அரிப்பு ஏற்படுகிறது. இதை காப்பாற்ற வேளாண் அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, மக்கள் நல திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி வேளாண் அலுவலகத்தால் திருப்பி அனுப்பப்படுகிறது. இன்னும் அப்படியே போனால், விவசாயம் நடக்காத தொகுதியாக மாறிவிடும் நிலை தான் உள்ளது. இந்த தொகுதி திமுக வசம் இருந்ததால், கடந்த 5 ஆண்டுகளாக வளர்ச்சி பணிகளில் அதிமுக அரசு எந்தவித கவனமும் செலுத்தவில்லை. ஊராட்சி மக்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்படுகிறது. செய்யூர் தொகுதியில் இடைகழிநாடு பேரூராட்சியில் அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றனர்.

Related Stories: