பாகிஸ்தான் அதிபருக்கு கொரோனா தொற்று

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதில், அரசியல் தலைவர்கள் பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் சீன கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதே போல், சீன தடுப்பூசி போட்டுக் கொண்ட அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்விக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சரான பர்வேஸ் கட்டாக், முன்னாள் நிதி அமைச்சர் ஹபீஸ் ஷேக் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. வைரஸ் தொற்று அதிகரிப்பதால் வரும் 5ம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே சமயம், போதிய அளவில் தடுப்பூசி இல்லாமலும் பாகிஸ்தான் அரசு தடுமாறி வருகிறது. இதுவரை அங்கு 6.63 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: