வரும் சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்: பிரகாஷ் காரத் பேச்சு

சென்னை:சென்னையில் பல்வேறு இடங்களில் பிரகாஷ் காரத் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து மகாகவி பாரதி நகர் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது: தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் முக்கியமான தேர்தல். தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய மிக முக்கியமான தேர்தலுமாகும். பாஜ அரசின் பிளவுவாத கொள்கைகள் தமிழக  மக்களின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். தமிழகத்தில் நேரடியாக வரவில்லை.  அதிமுக என்ற முகமுடியை போட்டுக்கொண்டு வலம் வருகிறது. தனது மக்கள் விரோத கொள்கைகளை தமிழகத்தில் அதிமுக மூலமாக நிறைவேற்றி வருகிறது.  இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.

Related Stories: